பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (கற்பழிப்பு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன், காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்டட அந்தப் பெண் சம்பவம் நடக்கும் போது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாளாம். அதை அந்தப் பெண்ணின் அனுமதியில்லாமல் அகற்ற முடியாது என்பதால் நடந்தது கற்பழிப்பு இல்லை என விளக்கமளித்த நீதிமன்றம் மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்த உறவு என்று அவனை விடுதலையும் செய்தது.
கார்டியன் செய்தித்தாளில் ஜூலி பின்டல் எழுதிய கட்டுரையை ஜூலை மாதம் இந்து பேப்பர் வெளியிட்டிருந்தது. ஆணாதிக்கத்தின் திமிரோடு படு பிற்போக்காக தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இப்போது அந்த விளக்கத்தை வேறு ஒரு வழக்கில் திருத்திவிட்டதாம். தனது கூட்டாளியின் பதினாறு வயது மகளைக் கற்பழிக்க முயன்ற கயவன் மேற்கண்ட இறுக்கமான ஜீன்சு பேண்டு விளக்கத்தை வைத்து வாதிட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லையாம்.
இந்த சுயவிமரிசனத்தை எடுத்துக்கொள்வதற்கு பல போராட்டங்களும், பத்தாண்டு காலமும் ஆகியிருக்கிறது. பாலியல் வன்முறையின் பால் பல நீதிமன்றங்கள் உலகெங்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாளுவதாக ஜூலி குறிப்பிடுகிறார். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்திருக்கிறாள், எப்படி நடந்துகொள்கிறாள் என்பதெல்லாம் கற்பழிப்பு வழக்குகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் பல குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்கின்றனர். உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.
தன்னை வல்லுறவுக்குள்ளாக்கிய அயோக்கியனை ஒரு பெண் பொது அரங்கில் தண்டிக்க நினைப்பதே அரிது. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னமும் கடினமான ஒன்று. கற்பு, புனிதம் என்ற சங்கிலியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டவள் என்று நீதி கோரினாலே அவள் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பார்ப்பனியத்தின் விழுமியங்களால் இயங்கிவரும் சமூகம் அவளை புனிதம் கெட்ட அபலையாகத்தான் பார்க்கிறது. தமிழ் சினிமாவில் கூட கற்பழித்தவனைக் காப்பாற்றுவதற்கு வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் அவன் எங்கே கை வைத்து என்ன செய்தான் என்று வாதிடும்போது, எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண் அழுது அரற்றுவாள். நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். இவையெல்லாம் விதிவிலக்குகள்தான் என்ற போதும் சட்டமும், நீதிமன்றங்களும்கூட இதற்குத் தோதாகத்தான் இயங்குகின்றன என்பது முக்கியம்.
நீதிமன்றங்கள் மட்டுமல்ல கற்பழிப்புக்கு ஓரளவு பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பது உலகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது என்கிறார் ஜூலி. அம்னஸ்டி அமைப்பு சென்ற வருடம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்த கால்பங்கினர் கற்பழிப்புக்கு பகுதியளவோ, முழுமையாகவோ பெண்களும் செக்சியான உடை அணிவதின் மூலம் காரணமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தனராம். இதையே அயர்லாந்தில் நடந்த ஆய்விலும் நாற்பது சதவீதம் பேர் வழிமொழிந்திருக்கின்றனர்.
ஆண்களின் கற்பழிப்பு நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கருத்துக்கள் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுளுக்கும் சொந்தமாக இருக்கிறது. ஒரு பெண் உடை அணிவதன் மூலம் ஒரு ஆணை கற்பழிப்பு நடவடிக்கைக்கு ஈர்க்கிறாள் என்ற வாதம் உண்மையில் பெண்ணைத்தான் குற்றவாளி ஆக்குகிறது. தப்பு செய்யும் ஆண்களெல்லாம் சூழ்நிலையின் கைதிகளாக கருதப்படுகிறார்கள். இதுதான் உலகத்தின் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?
நைஜீரியாவில் ஒரு செனட்டர் ஒரு மசோதாவை முன்மொழிந்திருக்கிறாராம். அதன்படி ஒரு பெண் தனது அங்கங்கள் தெரியும் வண்ணம் உடையோ, குட்டைப் பாவாடையோ அணிந்து பொது இடத்தில் வலம் வந்தால் மூன்று மாதம் சிறை தண்டனையாம். இது அமலுக்கு வரும் பட்சத்தில் நைஜீரியாவின் சார்பில் ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகள் அனைவரும் குற்றவாளியாகி விடுவார்கள்! இதே போல போலந்திலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெரு விபச்சாரத்தையும் கற்பழிப்புகளையும் குறைப்பதற்கு குட்டைப் பாவாடை அணிவதற்குத் தடை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறாராம். வடக்கு மலேசியாவில் ஒரு பழமைவாத நகரக் கவுன்சில் குதிகால் செருப்புக்களையும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயங்களையும் தடை செய்வதன் மூலம் கற்பழிப்புக்களையும், முறையற்ற பாலியல் உறவுகளையும் குறைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.
இந்த விசயத்தில் இசுலாமியவாதிகளை யாரும் மிஞ்ச முடியாது. ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்பது அவர்கள் கருத்து. இதில் அனைவரும் தாலிபான்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களின் காமம் தலைவிரித்து ஆடுமாம். ஏன்தான் ஆண்களை அப்படி காமவெறி பிடித்தவர்களாக அல்லா படைத்தார் என்பது தெரியவில்லை.
இறுதியாக ஜூலி பின்டால் பெண்களைப் பற்றி புனையப்பட்டிருக்கும் இக்கருத்துக்களைச் சாடி ஒரு பெண் என்ன அணிவது என்பதை அவள் தீர்மானிக்கட்டும், அதை மற்றவர்கள் கட்டளையிடத் தேவையில்லை, ஒரு பெண் குடித்திருந்தாலும், குட்டைப் பாவாடை அணிந்திருந்தாலும் யாரும் அவளைக் கற்பழிக்க முடியாது, அப்படி நடந்து கொண்டால் அது குற்றமே, அதற்கு பெண்ணைக் காரணமாக சொல்வதை ஏற்கமுடியாது என்கிறார்.
உண்மைதான். ஒரு பெண் சாக்குத் துணியை மூடியிருந்தாலும், திறந்த மார்பகத்தோடு நடமாடினாலும் அவளைக் கற்பழிக்க முடிவெடுத்து விட்ட கயவர்களுக்கு உடை ஒன்றும் ஒரு பொருட்டல்ல. ஒரு பெண் தனியாக ஆள் நடமாற்ற பகுதியில் சிக்குவதுதான் அவர்களுக்குத் தேவையான ஒன்று. இதைக் கடுமையான சட்டத்தின் மூலமே தண்டிக்க முடியுமேயன்றி பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது பெண்ணை அடிமையாகக் கருதும் வெளிப்படையான ஆணாதிக்கத் திமிராகும்.
ஆனால் ஜூலி பின்டாலின் கருத்தோடு கூடுதலாக நாம் சொல்வதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம, சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.
ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.
எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.
சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும். அப்போதுதான் நீதிமன்ற உதவியோடு ஆணாதிக்கம் நடத்தும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராட முடியும். இது குறித்து பெண் வாசகர்கள், பெண் பதிவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதனால் ஆண்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல. விவாதத்திற்காகக் காத்திருக்கிறோம்!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அழகு, சமூக விமரிசனம், செய்தி விமரிசனம், பாலியல், பெண்ணிய அரசியல் | குறிச்சொற்கள்: ஆணாதிக்கம், கற்பழிப்பு, ஜீன்ஸ், நீதிமன்றம், பர்தா, பாலியல் வன்முறை, பேஷன் ஷோ































Yes,
Now after the NeoColonialism, fashion shows and use of cosmetics both for Ldies & Gents are became a big business.
Even the synthetic cosmetics are too dangerous to skin and health, the Media, especially Advertisements changed dresse sensing, cosmetics on the People mind.
Most of the youth and Rich(kizhadugalum) also wearing attractive dresses.
They have changed their minds. The became addicts of new items and fashions.
Instead of realising the “Real Beauty of Life (Love & Humanity)” they search the beauty in the dress and Cosmetics.
Pickuping Girls and Correcting Fiugures, Apporaching Girl for Love and vice versa are done on the basis of Look & Feel. Not on the Character and Humanity.
They fear to see other people if they are not well dressed. They exhibit them selves to the others. It is a psycho change.
////சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர்///
சிதம்பரம் பத்மினியின் உண்மையான கதை தெரியுமா ? தெரியாது என்றால் தனிமடலில் கேட்கவும். சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்படவில்லை.
சி.என்.என் தொலைக்காட்சியில் ஆண்டர்சன் கூப்பர் என்று ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் இருக்கார். அவரைப் பார்த்தால் அலங்கார பொம்மைப் போலவே தோற்றமளிப்பார். ஒரு முறை சீனாவின் மாசினை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதற்காக தன்னை விளையாட்டாக உடல் பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொண்டார். பரி சோதனைகளின் முடிவில் அவருக்கு தோல் புற்று நோயிருப்பதாக தெரியவந்தது.
சீன நதியில் மாசு இருக்கிறதோ இல்லையோ இந்த செயற்கை அலங்காரப் பொருட்களில் ஆபத்து கண்கூடு.
***
தொன்று தொட்டு வரும் பெண்ணை பெண்ணே ஆணுக்கு போகப்பொருள் ஆகு என்கிற விளம்பரங்களே இவ்வகை கணக்கெடுப்பில் பிரதிபலிக்கின்றனர். விக்டோரியா சீக்ரெட் உள்ளாடை விளம்பரங்கள் சாலை விபத்தை ஏற்படுத்தின. இன்று உலகெங்கும் உள்ள அழகிகளைப் பிடித்து ஒட்டறைக் குச்சி போல வாழுவது எப்படி என்று முன்னுதாரணமாக நிறுத்துகின்றனர். இந்த ஹய் ஹீல்ஸ் பார்க்க நன்றாக இருந்தாலும், கால்களையே காவுவாங்கக் கூடிய செருப்புகள்.
பெட்டிக் கடை கலர் மிட்டாய் போல் பார்க்க நல்லா இருக்கு, பயன்படுத்துபவர்கள் பாடுதான் சிறிது நாளில் தள்ளாடுகிறது!
ஆண்கள் பெண்களை கவர்வதும், பெண்கள் ஆண்களை கவர்வதும் இயற்கை. இதை யாராலும் தடுக்கவோ குறைக்கவோ முடியாது. அதர்க்காக இருபாலருமே உடல் மற்றும் உடைகளை உபயோகப்படுதுகிரார்கள். இருவருமே, கை மற்றும் மார்பழகை காண்பிக்க முயற்சி, குட்டை சட்டை, இருக்கமான உடைகள், எல்லாம் பொதுவாக பயன் படுத்துகிறார்கள். ஆக மற்ற பாலினத்தை கவரும் உணர்ச்சி என்பது இருவருக்கும் சமமே.
இந்த சமூக கட்டமைப்பு என்பது ஆண்களாள் ஏற்படுத்தப்பட்டதும், ஆணாதிக்கம் உடையதாகவும் மாறிவிட்டதும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.
“கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
(கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், தீண்டியும் அனுபவிக்கப்படும் இன்பங்கள் பெண்ணிடம் மட்டுமே உண்டு.)
இது வள்ளுவன் மொழி. இப்படி ஓர் பெண் கவிஞர் சங்க காலத்தில் பாடினாரா எனபது தெரியாது. பாடியிருந்தாளும், வரலாற்றில் இடமில்லாமல் போகும் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஆணால், பெண் கற்பழிப்பு என்பதற்கு ஆணாதிக்கத்தை மட்டும் காரணம் சொல்ல முடியாது. அதற்கு, முதல் மற்றும் முக்கியமாய், நாம் மறந்துபோன “தனிமனித ஒழுக்கம்” தான் காரணம்.
இந்த சமூகம், ஒருவேலை பெண்ணாதிக்கச் சமூகமாயிருக்குமேயானால், ஆண் கற்பழிப்பு பற்றிய இப்படி ஒரு பதிவிற்கு, நிரைய பெண்கள் பின்னூட்டம் போட்டிருப்பார்கள். பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, கடவுளர்களோ… யாருக்கும் இதை கற்பிக்க நேரம் இல்லை. எதிர் வரும் தலைமுறையினர் ஒழுக்கம் என்றால் என்ன என்று கேட்கு அலவுக்கு வந்துவிட்டோம்.
ஒழுக்கம் கற்பிக்காமல், நம்மால், எந்த கற்பழிப்பையும் குறைக்கவோ, நிருத்தவோ முடியாது. ஆண்கள், மேலை நாட்டு பொருட்கள், விளம்பரங்கள், இன்னும் எத்தனை சொன்னாலு, முழுமையான் முதற்காரணம், நம்முள் புரையோடிக்கொண்டிருக்கும், “தனி மனித ஒழுக்கக்குறைவே”!!!
The article pinpoints the status of women.Time changes but the condition of women remains the same. As many believed education has not contributed anything favour to the emancipation of women.
பாலியல் தேவை என்பது வயிற்றுப் பசியைப் போன்றதே! பசிதாங்காமல் பலர் திருடி உண்கிறார்கள்! கூலிக்கு வேலை கிடைத்தால், வேலை செய்து பணம் கொடுத்து உண்கிறார்கள். அதேபோல் ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள் இருந்திருந்தால் கற்பழிப்புகள் நிச்சயம் குறையும். உடல் பசி எடுத்தோர் பணம் கொடுத்து தீர்த்துக்கொள்ளட்டும். அல்லது ஆணும் பெண்ணும் வரையறையின்றி உடலுறவில் ஈடுபட அனுமதித்தால் பசியெடுக்கும் இருபாலாரும் தங்கள் உடற்பசியை தீர்த்துக்கொள்ளலாம் யாரும் யாரையும் வற்புறுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. எங்காவது நாய் ஆடு மாடு ரேப் பண்ணுதுன்னு சொல்றாங்களா? அதுபோல் பிறியா விடுங்க எல்லாமே சரியாயிடும்.
Dai naye…
Appa unga relative ellarayum kooti oru vibasara viduthi arambida..
Karpalipu kurayutanu papom..
//சிதம்பரம் பத்மினியின் உண்மையான கதை தெரியுமா ? தெரியாது என்றால் தனிமடலில் கேட்கவும். சிதம்பரம் பத்மினி கற்பழிக்கப்படவில்லை.//
ஒரு விபசாரியாக இருந்தாலும் அவளது விருப்பம் இல்லாமல் தொட்டால் அது பாலியல் வன்முறை தான். பத்மினிக்கு நடந்ததை பக்கத்திலே இருந்து பார்த்த மாதிரி “கற்பழிக்கப்படவில்லை”ன்னு அழுத்திச் சொல்றிங்க. நான் சிதம்பரத்தான் சார், எனக்கும் உங்க கதையை கொஞ்சம் தனி மடல்ல அனுப்புங்களேன். k v r a j a [at] g m a i l [dot] c o m
Dear,
I don’t know about Chidambaram Padmini History, pls tell me fully, so i can analyse thetrue.
alecbala@gmail.com
தோழரே ஆண்ணாதிக்கத்தைப்பற்றிய உங்களுடைய பதிவுகள்,நிச்சயமாக பல தோழர்களையே அடுத்தக்கட்டத்துக்குக்கொண்டுசெல்லும் என்று நினைக்கிறேன்.மிகவும் நன்றி தோழரே.
பாலியல் தேவை என்பது வயிற்றுப் பசியைப் போன்றதே! பசிதாங்காமல் பலர் திருடி உண்கிறார்கள்! கூலிக்கு வேலை கிடைத்தால், வேலை செய்து பணம் கொடுத்து உண்கிறார்கள். அதேபோல் ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள் இருந்திருந்தால் கற்பழிப்புகள் நிச்சயம் குறையும். உடல் பசி எடுத்தோர் பணம் கொடுத்து தீர்த்துக்கொள்ளட்டும். அல்லது ஆணும் பெண்ணும் வரையறையின்றி உடலுறவில் ஈடுபட அனுமதித்தால் பசியெடுக்கும் இருபாலாரும் தங்கள் உடற்பசியை தீர்க்கொள்ளலாம் யாரும் யாரையும் வற்புறுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது. எங்காவது நாய் ஆடு மாடு ரேப் பண்ணுதுன்னு சொல்றாங்களா? அதுபோல் பிறியா விடுங்க எல்லாமே சரியாயிடும்.
—- இது உண்மையில் சரியான கருத்து e.g) refer singapore’s real time practice and rape crimes
தனி மனிதனுக்கு தேவையான கல்வி, வேலை, உறுதியாகும் போது சரியான வாழ்க்கைதுனை பாலியல் தேவையை பூர்த்தி செய்வதோடு.அவனை அடுத்தவரின் மீது வன்புணர்ச்சியை செய்ய வழியில்லாமல்போகிறது. உலகமயமாக்கல் கொள்ளையின் மிகமோசமான விளைவுதான் தனிநபர் ஒழுக்கத்தை தவிடுபொடியாக்கிவிடுகிறது.
உலகமயமாக்கலில் மனிதர்களே பண்டமாகிவிட்ட நிலையில், பெண்மைக்கு மதிப்பற்று விற்பனைப்பொருளாகிவிட்டது. இது குமுகாயச் சீரழிவைத் தூண்டுவதோடு, தனிமனித ஒழுக்கத்தைச் சிதைவுக்குள்ளாக்குகிறது. சுதந்திரமான பாலுறவு என்பது யாரும் யாருடனும் படுக்கலாம் என்பதைக் கண்ணியமாகச் சொல்லுவதே.இது மிருகங்களை ஒத்த நிலையாகும். இது பெரும்புள்ளிகளிடையே ஒரு காலத்தில் துறப்பு மாற்றும்விளையாட்டாக, இந்த அசிங்கம் நடைபெற்றதுமுண்டென அறிந்துள்ளேன். உடலுறவென்பது மனிதவாழ்வியலின் தேவை. இனவிருத்திக்கும், உடற்சுகத்துக்குமாக நிகழ்கிறது. இருபாலாருக்கும் தேவைப்படுவது. ஒரு சிலர் தாகத்தோடு அலைந்து தரம்கெட்டுச் சீரழிவதோடு, தமைச்சார்ந்த குடும்பத்தை சீரழித்துவிடுகின்றனர். உடலுறவு என்பது ஒரு அதியுச்ச பட்சமான உணர்வின் பரிமாற்றம். ஆனால் அதனை மலினப்படுத்திக் கேவலப்படுத்தி விடுவதென்பதும், அதனை ஒரு கூடாதவிடயமாகப் பார்த்தலென்பதுமே சமுதாயச் சக்கரத்தில் நசிபடும் ஒரு விடயமாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான , அந்தந்த வயதுவரும்போது ஈடுபடக் கூடியது என்று சொல்லுகின்ற துணிவு எப்போது வருகிறதோ, அப்போதுதான் இந்தப் பாலியல் வன்முறை முடிவுக்குவரும்.
உலகமயமாக்கலில் மனிதர்களே பண்டமாகிவிட்ட நிலையில், பெண்மைக்கு மதிப்பற்று விற்பனைப்பொருளாகிவிட்டது. இது குமுகாயச் சீரழிவைத் தூண்டுவதோடு, தனிமனித ஒழுக்கத்தைச் சிதைவுக்குள்ளாக்குகிறது. சுதந்திரமான பாலுறவு என்பது யாரும் யாருடனும் படுக்கலாம் என்பதைக் கண்ணியமாகச் சொல்லுவதே.இது மிருகங்களை ஒத்த நிலையாகும். இது பெரும்புள்ளிகளிடையே ஒரு காலத்தில் துறப்பு மாற்றும்விளையாட்டாக, இந்த அசிங்கம் நடைபெற்றதுமுண்டென அறிந்துள்ளேன்.
உடலுறவென்பது மனிதவாழ்வியலின் தேவை. இனவிருத்திக்கும், உடற்சுகத்துக்குமாக நிகழ்கிறது. இருபாலாருக்கும் தேவைப்படுவது. ஒரு சிலர் தாகத்தோடு அலைந்து தரம்கெட்டுச் சீரழிவதோடு, தம்மைச்சார்ந்த குடும்பத்தை சீரழித்துவிடுகின்றனர். உடலுறவு என்பது ஒரு அதியுச்ச பட்சமான உணர்வின் பரிமாற்றம். அது புனிதமானதும் கூட. ஒருத்திக்கு ஒருவனாக இருக்கும் வரை. மற்றவை யாவும் யோனி மடலுக்கும் ஆண்குறிக்குமான உறவன்றி வேறல்ல என்பதே பொருந்தும். ஏனென்றால் தன்னை விற்பவளோ இவனுக்கு விரைவாக விந்து வெளியேறி என்னை விட்டால் போதும், அடுத்த வாடிக்கையாளரை பிடிக்க என்றெண்ணியவாறே படுப்பாள் போனவனும் தனது அவசரத்தை முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவான். இன்னும் ஒரு படி மேலே போய் சில பாலியல் தொழில் செய்வோர் தன்னுடைய பெண் குறியை ஊத்தையாக்கி விடாதே என்பவர் கூட உண்டு. எனவே அந்த இடத்திலே அவளது பார்வையில் தனது உறுப்பைக் கூட ஒரு பண்டமாகப் (பொருளாக) பார்க்கிறாளேயன்றி வேறெதுவுமில்லை.
எனவே உடலுறவையும் பாலியல் வன்முறையையும் இரு வேறுதளங்களில் நோக்கப்பட வேண்டியவை. ஆனால் உடலுறவை மலினப்படுத்திக் கேவலப்படுத்தி விடுவதென்பதும், அதனை ஒரு கூடாதவிடயமாகப் பார்த்தலென்பதுமே சமுதாயச் சக்கரத்தில் நசிபடும் ஒரு விடயமாக உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான , அந்தந்த வயதுவரும்போது ஈடுபடக் கூடியது என்று, எப்போது நாம் எமது பிள்ளைகளோடு, கதைக்கின்ற, சொல்லுகின்ற துணிவு வருகிறதோ, அப்போதுதான் இந்தப் பாலியல் வன்முறை முடிவுக்குவரும். இது ஒன்றும் ரகசியமல்ல என்பது தெரியும் போது பெரிதாக அதைப்பற்றிய மாயை விலகிவிடும். அப்போது குமுகாயமாற்றம் தானாக நிகழும். அதன் வழி ஒரு ஒழுக்கமான உலகைக் காணலாம். இல்லையேல் இது தொடரவே செய்யும்.
vinaukalin unmai sudukiradhu
EDAMADAYANE CHENNAITHAMILA NEE
SONNATHUBOL SEYTHAL INDIYAVIN ( MAKKAL
THOKAIYIL ) BENKALIL 60 VEETHAMANAVARKAL
விபச்சார விடுதிகளிள் இருப்பார்கள்.
SILAVELAYIL UNATHU THAYO, SAKOTHATIYO KUUDA IRUKKALAM.
nallan sonnatha naan ammodikiran
“thani mandha ozukkam” irupallarukkam podhu ]
adai tivirama ovovru vitili arambitha edirgala samudhaium menpada ore vhazi
anna idaithan ella perivangalum solla matum siyranga