வினவு: புதிய வலைத்தளம்!

CPI(M) கட்சியில் மோடி பக்தர்கள் !

cpi-m_modiஇந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல. மதச்சார்பின்மை, மேலும் வாசிக்க »

மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

wrap

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாசிக்க »

அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 7

மொரிஷியஸ் தீவு பற்றி தமிழர்கள் அறிந்திருக்கும் அளவிற்கு,  அதைவிட பன்மடங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த “கொமொரோ” (Comoros) தீவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு ஆப்பிரிக்க கடலில், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மாபெரும் மடகஸ்கார் தீவை  பிரிக்கும், மொசாம்பிக் நீரிணையின் மத்தியில் அமைந்துள்ள நான்கு சிறு தீவுகள் சேர்ந்து, கொமொரோஸ் குடியரசு உருவானது. மேலும் வாசிக்க »

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

chidambaram shoe congressபடம் நன்றி : நான் 1084

ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே
சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் – ஆனா
சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! மேலும் வாசிக்க »

கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!

karunanithi-perani-cartoon(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன. மேலும் வாசிக்க »

கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என  எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே? மேலும் வாசிக்க »

இந்து மதம் கேட்ட நரபலி !

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோமென பார்ப்பன பாசிச பா.ஜ.க கும்பல் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவில் அதாவது அவர்களது பாரதத்தில் ராமராஜ்ஜியம் கொண்டு வருவோமென கொக்கரித்துள்ளது.  பாபர் மசூதியை இடித்தும், ஆயிரக்கணக்கான முசுலீம்களை பலியிட்டும் இந்து மதத்தை வளர்க்க நினைக்கும் இந்துமதவெறிக் கும்பல் ராமர் கோவில் கட்டுவது இருக்கட்டும், இருக்கும் ‘இந்துக்’ கோவில்களின் அருகதை என்னவென்று அவர்களால் கூட்டம் போட்டு பேச முடியுமா? இந்து மதம் என்பது வருண, சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் சிறைச்சாலை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நாட்டுப்புறங்களில் இருக்கும் கோவில்களில் தலித்துக்களுக்கு இன்றும் அனுமதியில்லை. எங்கெல்லாம் தலித் மக்கள் அந்த உரிமையை  கோருகிறார்களோ அங்கெல்லாம் ராமனின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்? சூத்திரன் சம்புகன் நேரடியாக ஆண்டவனை வணங்கி தவம் இருந்தான் என்பதற்காக அதாவது ஒரு சூத்திரன் தெய்வத்தை தொழவேண்டுமென்றால் பாரப்பன பூசாரிகள் மூலம்தான் செய்யவேண்டும் என்பதற்காக அந்த சம்புகனை வெட்டிக் கொன்றவன் இந்த அயோத்தி ராமன். இது இராமயணத்தில் பலரது கவனத்திற்கும் வராத செய்தி. அந்த பார்ப்பனிய வெறிபிடித்த அயோக்கிய ராமனின் வாரிசுகள் இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் கொன்று வருகிறார்கள். ஆம், இந்து மதம் சமீபத்தில் தென்தமிழகத்தில் நடத்தியிருக்கும் நரபலியை உங்கள் கவனத்திற்காக கொண்டு வருகிறோம். ராம ராஜ்ஜயம் குறித்து இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்!

மேலும் வாசிக்க »

ஈழமும் இந்திய தேர்தலும் – என்ன செய்ய வேண்டும் ?

சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம். மேலும் வாசிக்க »

ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !

ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக் கட்சியின் எதிர்ப்பைக் கண்டு சினமடைந்து அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான  தமிழருவி மணியன். தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளும் ஈழத்தை மறந்தும் மறுத்தும் கூட்டணி அரசியிலை சில தொகுதிகளைப் பெறவேண்டுமென்பதற்காக பரப்புரை செய்துவருகின்றன.  இதை அம்பலப்படுத்தி ஜூனியர் விகடன் ஏப்ரல் 5 இதழில் தமிழருவி மணியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது அவரது ஒப்புதலோடும், ஜூனியர் விகடனுக்கு நன்றி தெரிவித்தும் இங்கு வெளியிடப்படுகிறது.

மேலும் வாசிக்க »

கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் !

குருநாதர்கள் – பாகம் 2

g2புகைப்படம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு. குடும்ப அட்டை, நிறுவனத்தில் பணிபுரியும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை – எத்தனையோ விதங்களில் அடையாள நிரூபணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கட்டை விரல்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உன் அடையாளம். உன்னையே நீ மறந்தாலும் ( மூளைச் சிதைவு நோயில் இது சாத்தியம் ) உன்னை உலகுக்கு அடையாளம் காட்டுவது உன் விரல் ரேகைதான். மேலும் வாசிக்க »